Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விளம்பர படங்களுக்கு இசையமைக்கும் கார்த்திக்ராஜா!

07 டிச, 2015 - 12:17 IST
எழுத்தின் அளவு:
Karthikraja-composing-music-for-Advertisment

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜா. பல படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். என்றபோதும், இன்னும் கவனிக்கப்படும் இடத்துக்கு அவர் வரவில்லை. மேலும், விஜயகாந்த் நடித்த அலெக்சாண்டர் படத்துக்கு இசையமைத்த கார்த்திக் ராஜா, அவரது மகன் சண்முகபாண்டியன் நடித்து வெளியான சகாப்தம் படத்துக்கும் இசையமைத்தார். தற்போது விக்னேஷ் நடித்துள்ள 'அவன் அவள்' உள்பட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவ்வப்போது அவரது இசையில் படங்கள் வெளியாகி வந்தபோதும் படங்களின் வெற்றி, பாடல்களின் ஹிட் இல்லாததால் கமர்சியல் வட்டத்துக்குள் இல்லாத இசையமைப்பாளராக இருந்து வருகிறார் கார்த்திக்ராஜா.


மேலும், தனது தந்தை இளையராஜாவுடன் இணைந்து வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் கார்த்திக்ராஜா, அவர் இசையமைக்கும் படங்களிலும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், முன்பெல்லாம் விளம்பர படங்களுக்கு இசையமைப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த கார்த்திக்ராஜா, இப்போது விளம்பரங்களுக்கு இசையமைக்கத் தொடங்கியிருக்கிறார். அந்தவகையில், கடந்த தீபாவளியின்போது சில துணிக்கடை, ஜீவல்லரி கடை விளம்பர படங்களுக்கு இசையமைத்தவர், தற்போது மேலும் சில விளம்பரங்களுக்கு இசையமைக்கிறாராம். அந்த வகையில், சினிமாவில் பிசியாகாத கார்த்திக்ராஜா விளம்பரத்துறையில் பிசியாகிக்கொண்டிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in