தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களில் நாயகனாக நடித்த சர்வானந்த் தற்போது தமிழ் படங்களில் நடிகாவிட்டாலும் தெலுங்கு திரை உலகில் பிசியாகவே உள்ளார். சர்வானந்த் இறுதியாக நடித்த மல்லி மல்லி இதி ராணி ரோஜு எனும் தெலுங்கு படம் பெரும் வெற்றி பெற்றது. அப்படத்திற்கு பின்னர் டோலிவுட்டில் எக்ஸ்பிரஸ் ராஜா எனும் படத்தில் சர்வானந்த் நடித்து வருகின்றார். இயக்குநர் காந்தி இயக்கும் எக்ஸ்பிரஸ் ராஜா படத்தில், நடிகை சுரபி சர்வானத்திற்கு ஜோடியாக நடிக்கின்றார். யுவி கிரியேசன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரவீன் இசையமைத்துள்ளார். சாலை பயணத்தை மையப்படுத்திய இப்படத்தில் சர்வானந்த் நகைச்சுவையில் கலக்கி இருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புகள் நிறைவு பெறப் போவதாகவும் விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். எக்ஸ்பிரஸ் ராஜா படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என்றும் இயக்குனர் காந்தி கூறியுள்ளார்.