நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் என்ற கார் ரேஸ் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றவர்கள், பால்வாக்கர் மற்றும் வின்டீசல். கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கார் விபத்தில் பால்வாக்கர் இறந்தார். அந்த செய்தி உலக சினிமா ரசிகர்களையே உலுக்கியது. பால்வாக்கர் உடன் பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் படத்தின் 7 பாகங்களிலும் நடித்த வின்டீசல், வாக்கரை தனது சொந்த தம்பியாக பாவித்தார்.
பால்வாக்கரின் மரணம் வின்டீசலை வெகுவாக பாதித்தது. நேற்று இரண்டாம் ஆண்டு அஞ்சலியை செலுத்திய வின்டீசல், தனது டிவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் பால்வாக்கரும் அவரும் அமர்ந்திருக்கும் படத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், பால்வாக்கரின் படம் சற்று மங்கலாக இருப்பது போலும், சகோதரத்துவத்திற்கு எல்லை இல்லை என்ற ஆங்கில வார்த்தையும் இடம் பெற்றுள்ளது. வின்டீசல் தனது மகளுக்கும் பால்வாக்கரின் பெயரையே சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.