கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
உண்மைதானே.. யாரோ முகம் தெரியாத ஒருவன் சோஷியல் மீடியா மூலமாக தன் மீது அவதூறு பரப்புவானாம்.. அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா என்ன..? அதான் கிளம்பிவிட்டார் நேராக சைபர் செல்லுக்கு.. வேறு யார்.. மலையாள நடிகை மஞ்சு வாரியர் தான். சில தினங்களுக்கு முன் சோஷியல் மீடியாவில் இவரைப்பற்றி ஒரு பரபரப்பு தகவல் வெளியானது.. அதாவது பிரபல விளம்பரப்பட இயக்குனர் ஸ்ரீகுமாருக்கும் இவருக்குமிடையே காதல் என்பதுதான் அந்த செய்தின் சாராம்சம்.
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் மஞ்சு வாரியர் இணைந்து கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் விளம்பரப்படத்தில் நடித்தார் அல்லவா..? அந்த விளம்பரப்பட இயக்குனர்தான் இந்த ஸ்ரீகுமார். அந்த விளம்பரப்பட ஷூட்டிங்கில் இருந்துதான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இதனை அறிந்து ஸ்ரீகுமாரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த செய்தியில் சொள்ளபட்டிருந்தது..
ஆனால் இதில் எதுவும் உண்மை இல்லையென்றும், தன்மீது களங்கம் சுமத்துவதற்காகவே இதுபோன்ற வதந்தியை விஷமிகள் பரப்புகின்றனர் என்றும்,. இதற்கு சில மீடியாக்களும் துணை போகின்றன என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சைபர் செல்லில் புகார் அளித்துள்ளார் மஞ்சு வாரியர். சைபர் க்ரைம் போலீசாரும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தீவிரமாக விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.