டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளிவந்த கிக் 2 படம் எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியது. கிக் 2 படத்தைத் தொடர்ந்து ரவி தேஜா நடித்துள்ள பெங்கால் டைகர் படத்தை இயக்குனர் சம்பத் நந்தி இயக்கியுள்ளார். டிசம்பர் 10 ஆம் தேதி வெளிவரவுள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகின்றது. நிகழ்ச்சியின் போது பேசிய இயக்குனர் சம்பத் இப்படத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இப்படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் வெற்றியைப் பெறும். குறிப்பாக ரவி தேஜாவின் மாறுபட்ட நடிப்பில் இப்படம் வசூலையும் அள்ளும் என கூறியுள்ளார். ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிகை தமன்னா மற்றும் ராக்ஷி கண்ணா இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராதா மோகன் இப்படத்தை தயாரித்துள்ளார்.