விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பாகுபலி படத்தின் வெற்றி நாயகன் பிரபாஸ் தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகின்றார். சரித்திர திரைப்படம் என்பதால் பாகுபலி 2 படத்தை முடித்த பின்னரே வேறு படங்களில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். பாகுபலி 2 படத்திற்காக கம்பீரமான உடற்கட்டை பெற தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் பிரபாஸ் வருண் தேஜ் நடித்து வரும் லோபர் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பூரி ஜெகன்நாத் இயக்கி வரும் லோபர் படத்தில் வருண் தேஜிற்கு ஜோடியாக நடிகை திஷா நடித்துள்ளார். ஹைதரபாத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்ளும் பிரபாஸ் லோபர் பட பாடல்களை வெளியிடவுள்ளார். மேலும் இவ்விழாவிற்கு படக்குழுவினருடன் பல டோலிவுட் பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இசையமைப்பாளர் சுனில் கஷ்யப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிசம்பர் 18 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.