பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு படத்தை எடுத்து முடிப்பதை விட அதை விளம்பரப்படுத்தி ரிலீஸ் செய்வது தான் தயாரிப்பாளர்களுக்கு பெரிய வேலையாக இருக்கிறது. படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு விதமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர் படக்குழுவினர். அதில் சமீபத்திய விளம்பர யுக்தி, சம்பந்தப்பட்ட படத்தின் வீடியோ கேம். ஏற்கனவே ரஜினி, விஜய், சூர்யா ஆகியோரது படங்களின் வீடியோ கேம் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பாபிசிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள ''உறுமீன்'' படத்திற்கும் ஒரு கேம் வெளியிட்டுள்ளார்கள்.
பிரெடிக்ஷன் கேம் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த கேமில் உங்களது பிறந்த தேதி உள்ளிட்ட விஷயங்களை தந்தால் போதும் பூர்வ ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள், அடுத்த ஜென்மத்தில் என்னவாக இருப்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இப்படியொரு வித்தியாசமான கேம்மை வெளியிட்டு படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இந்த கேம்மை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.
பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் நடித்திருக்கும் உறுமீன் படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ளார். டி.டில்லிபாபு தயாரித்துள்ளார். உறுமீன் படம் டிச.,4ம் தேதி வெளியாகிறது, இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.