ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு நகைச்சுவை நாயகன் அல்லரி நரேஷ், தமிழில் குறும்பு, போராளி போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அல்லரி நரேஷ் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படத்தைத் தொடர்ந்து மாமா மன்ச்சு அல்லுடு கன்ச்சு எனும் படத்தில் நடித்து வருகின்றார். மோகன் பாபு முக்கிய வேடமேற்று நடிக்கும் இப்படத்தை அவரது மகனும் பிரபல நடிகருமான மஞ்சு விஷ்ணு தனது 24 பிரேம்ஸ் பாக்ட்ரி பட நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். நகைச்சுவை கலந்த குடும்ப பொழுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகைகள் பூர்னா, ரம்யா கிருஷ்ணன், மீனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் ஐதரபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அணைவரும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட மஞ்சு விஷ்ணு அல்லரி நரேஷின் 50வது திரைப்படமான இப்படத்தை தயாரிப்பதில் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார். இயக்குநர் ஸ்ரீநிவாச ரெட்டி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை அன்று வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.