நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
கோபிசந்த் மற்றும் ரெஜினா ஜோடி சேர்ந்திருக்கும் சௌக்கியம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ல் திரைக்கு வரவிருக்கும் சௌக்கியம் படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஹைதராபாத் மற்றும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இப்படத்தின் பெரும்பாலுமான படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. கோபிசந்த் - ஸ்வேதா பரத்வாஜ் பங்கேற்கும் பாடல்கள் மட்டும் இன்னும் படமாக்கப்படவில்லையாம். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா டிசம்பர் 13ல் கோபிசந்த்தின் சொந்த ஊரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு பிரபல நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்டேட்டர் படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா சௌக்கியம் படக்குழு கேட்டவுடனே பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டாராம்.