தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைட்டானிக் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ தனது ஒவ்வொரு படத்திலும் அதிக மெனக்கெடலுடன் நடிக்கக்கூடிய நடிகர். ஆனாலும் ஆஸ்கார் விருது இன்னும் இவருக்கு கிடைக்கவில்லை, “டைட்டானிக்”, “த ஏவியேட்டர்”, “இன்ஷப்சன்” போன்ற பிரபல படங்களில் சிறப்பாக நடித்தும் இன்னும் ஆஸ்கார் விருதை இவர் வெல்லவில்லை.
தனது அடுத்த படத்திலாவது ஆஸ்கார் விருது வெல்லும் முனைப்புடன், கிறுஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வரவிருக்கும் “த ரெவணன்ட்” படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். அதற்காக, மிகப் பெரிய உழைப்பையும், நடிப்பையும் வழக்கத்தை விட அதிகமாகவே போட்டுள்ளார்.
இந்த படத்தின் பெரும்பாலான சூட்டிங் பனிமலையில் தான் நடந்துள்ளது. மைனஸ் 40 டிகிரிக்கும் ஒரு காட்சியில் நடித்து படக்குழுவிற்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார் டிகாப்ரியோ.
அலெஜாண்ட்ரோ கோன்ஜலாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படமாவது டிகாப்ரியோவின் ஆசையை நிறைவேற்றுமா?