Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பத்து நிமிடத்தில் கிடைத்த படத்தலைப்பு

30 நவ, 2015 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Vijay-sethupathi-got-Rajini-movie-title-in-10-minutes

ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் தலைப்பை தற்போது தயாராகும் படங்களுக்கு சூட்டுவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக ரஜினி நடித்த படங்களின் தலைப்புகளைத்தான் அதிக எண்ணிக்கையில் புதிய படங்களுக்கு வைக்கின்றனர்.


இந்த விஷயத்தில் ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷ் முதலிடத்தில் இருக்கிறார்.


ஏற்கனவே ரஜினி நடித்த பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களின் தலைப்பை தன் படங்களுக்கு சூட்டிய தனுஷ் தற்போது தங்கமகன் என்ற தலைப்பையும் சூட்டியுள்ளார்.


தனுஷ் மட்டுமின்றி வேறு பல ஹீரோக்களும் ரஜினியின் படத்தலைப்பில் குறி வைத்து வருகின்றனர்.


இந்நிலையில் விஜய்சேதுபதியின் புதிய படத்துக்கு தர்மதுரை என்ற ரஜினியின் படத்தலைப்பை சூட்டி உள்ளனர்.


1989 ஆம் வருடம் வெளியான தேவா என்ற கன்னடப் படத்தின் ரீமேக்கான தர்மதுரை படத்தில் ரஜினி, கௌதமி, சரண்ராஜ், நிழல்கள் ரவி, செந்தில் ஆகியோர் நடித்தனர்.


ராஜசேகர் இயக்கத்தில் 1991 ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் இது.


ராசி கலா மந்திர் என்ற படநிறுவனம் சார்பில் எஸ்.ராமனாதன் தர்மதுரை படத்தைத் தயாரித்திருந்தார்.


தற்போது விஜய்சேதுபதியை வைத்து எடுக்க உள்ள படத்துக்கு தர்மதுரை தலைப்பு தேவைப்பட்டதால், எஸ்.ராமனாதன் தரப்பினரை அணுகினார் ஸ்டுடியோ 9 சுரேஷ்.


அவரை அலுவலகத்துக்கு வரச் சொன்னவர்கள் 10 நிமிடத்தில் தர்மதுரை தலைப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கும் கடிதத்தைக் கொடுத்துவிட்டனர்.


அந்த தலைப்புக்காக பணம் எதுவும் வாங்கவில்லையாம்.


தர்மதுரை படத்தின் தயாரிப்பாளரே தர்மதுரையாக இருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in