ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'இது நம்ம ஆளு' எனப் பெயர் வைத்து விட்டு, காதல் கதையையும் படமாக்கி விட்டு, அதை காதலர் தினத்தில் வெளியிடுவதை விட வேறு எந்த விஷயம் பொருத்தமாக இருக்க முடியும். முதலில் இந்தப் படம் டிசம்பர் கடைசியில் வெளிவரும் என்றார்கள், அடுத்து பொங்கலுக்கு வெளிவரும் என்றார்கள். பொங்கலுக்கு ஏற்கெனவே பல படங்கள் மோதி வருவதால், தற்போது படத்தை காதலர்தினத்திற்குத் தள்ளி வைத்திருக்கிறார்கள். அன்று படம் கண்டிப்பாக வெளிவந்துவிடுமாம்.
இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்க வேண்டி உள்ள நிலையில் நயன்தாராவை எப்படியாவது சம்மதிக்க வைத்து அந்த இரண்டுப் பாடல்களையும் முடித்தால் படத்திற்கு மேலும் பிளஸ் பாயின்டாக இருக்கும் என்று நம்புகிறார்களாம். அதற்கான வேலைகளில் சிலர் இறங்கிவிட்டார்கள், எப்படியும் முடித்துவிடுவார்கள் என படக்குழுவினரே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். 'வாலு' படம் சிம்புவை ஏமாற்றிய நிலையில் 'இது நம்ம ஆளு' படமும் அடுத்து வெளிவரும் 'அச்சம் என்பது மடமையடா' படமும் தன்னை மீண்டும் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறாராம்.