பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகில் தற்போதைக்கு கைவசம் முக்கிய படங்களை வைத்திருக்கும் ஒரு நடிகை சமந்தா மட்டுமே. அந்த முக்கிய படங்களில் உள்ள மூன்று படங்களுமே தனக்கு முத்தான படங்களாக அமைந்து 'ஹாட்ரிக்' வெற்றியைப் பெற்றுத் தரும் என்று சமந்தா அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார். தனுஷுடன் நடித்துள்ள 'தங்கமகன்' படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது. விஜய்யுடன் நடித்துள்ள 'தெறி' அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவுடன் நடித்துள்ள '24' படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
சரியான இடைவெளியில் அடுத்தடுத்து தமிழ்த் திரையுலகின் மூன்று முக்கிய நடிகர்களின் படங்கள் வெளிவர உள்ளன. தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் வேறு யாருக்கும் இப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை. மூன்று படங்களுமே வெவ்வேறு விதமான கதைகள், கதாபாத்திரங்கள் என்பதால் தமிழில் தனக்கு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுத் தரும் என சமந்தா எதிர்பார்த்துள்ளாராம். '10 எண்றதுக்குள்ள' படத்தின் தோல்வி அடுத்தடுத்து வெளியாகும் இந்தப் படங்களால் சரியாகிவிடும் என்று அவர் நம்புகிறாராம்.
மீண்டும் தனுஷுடன் 'வட சென்னை' படத்தில் ஜோடி சேரும் சமந்தா அடுத்த ஆண்டிற்கான முன்னணி நடிககைளின் பட்டியலில் இப்போதே இடம் பிடித்துவிட்டார். 'தெறி, 24, வட சென்னை' ஆகிய படங்கள் அடுத்த ஆண்டில்தான் வெளிவர உள்ளன.