ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புலி படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் தெறி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நாயகிகளாக நடிக்கின்றனர். தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படும் இப்படத்திற்கு மெருபு(merupu) என படக்குழு பெயர் வைத்துள்ளனர். ராம் சரணின் தெலுங்கு படத்திற்கு தேர்ந்தெடுத்த இத்தலைப்பை படக்குழுவினர் தெறி படத்திற்கு கைப்பற்றி விட்டனர். மெருபு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றப்படும் தெறி படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வீ.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ரூ100 கோடி செலவில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தானு தயாரிப்பதாகக் கூறப்படுகின்றது.