ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கல்யாணமோ... காதுகுத்தோ... காலா காலத்தில் நடக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
இது படத்தின் ரிலீஸுக்கும் பொருந்தும்.
திட்டமிட்ட தேதியில் படம் வெளிவராமல் கிடப்பில் கிடந்தால்... ஆறிய கஞ்சி பழங்கஞ்சி நிலைமைதான்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்த படம் ரஜினி முருகன்.
லிங்குசாமி தயாரித்த இந்தப்படம் கடந்த ஒரு வருடமாக இழுபறியில் கிடக்கிறது.
பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
உத்தமவில்லன் படத்தில் ஏற்பட்ட கடன்சுமையை ரஜினி முருகன் படத்தின் மீது இறக்கி வைத்தார் லிங்குசாமி.
அதன் காரணமாக ரஜினி முருகன் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.
இந்நிலையில் கடைசி முயற்சியாக டிசம்பர் 4 அன்று ரஜினி முருகன் படம் வெளிவருவதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனாலும் அதை தியேட்டர்காரர்கள் உறுதியாக நம்பவில்லை. எனவே ரஜினி முருகன் படத்துக்கு தியேட்டர் கொடுக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.
தற்போதைய தகவலின்படி, டிசம்பர் 4 அன்று ரஜினி முருகன் படம் வெளிவந்தாலும் கூட 150 தியேட்டர்களுக்கு மேல் வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.
ஒருவேளை ரஜினி முருகன் படம் திட்டமிட்டபடி வெளியாகி ரிப்போர்ட் பாசிட்டிவ்வாக இருந்தால் ஒரு சில தினங்களில் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.