'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'தூங்காவனம்' படத்திற்குப் பிறகு மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடிக்க உள்ள படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் எனத் தெரிகிறது. இன்னும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இருந்தாலும் படம் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தெலுங்கில் 'அம்மா நானா ஆட்டா' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் ஒரு முழுமையான நகைச்சுவைப் படமாக உருவாக உள்ளதாகச் சொல்கிறார்கள்.
சமீப காலமாக கமல்ஹாசன் நடித்த மூன்று படங்களுக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். ஆனால், கமலின் புதிய படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசனின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே. அதைப் பல சந்தர்ப்பங்களில் கமல்ஹாசனே தெரிவித்துள்ளார். மீண்டும் இந்தக் கூட்டணி இணையவிருப்பது ரசிகர்களிடையே அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
2004ல் வெளிவந்த 'விருமாண்டி' திரைப்படத்திற்குப் பிறகு கமல் - இளையராஜா கூட்டணி 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.