ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
போக்கிரி, ஜில்லா ஆகிய படங்களில் போலீஸ் யூனிஃபார்ம் அணிந்து நடித்த விஜய்க்கு தெறி படத்தில் மீண்டும் போலீஸ் யூனிஃபார்மை மாட்டி விட்டிருக்கிறார் இயக்குநர் அட்லீ.
போக்கிரி, ஜில்லா இரண்டு படங்களிலுமே முதலில் ரௌடியாக அறிமுகமாகி, பின்னர் போலீஸாக உருவெடுப்பதுபோல் அவரின் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அதுமட்டுமல்ல, போக்கிரி, ஜில்லா இரண்டு படங்களிலும் விஜய் ஏற்றிருந்த போலீஸ் கதாபாத்திரங்கள் சற்று காமெடியாகவும் இருந்தன.
இதற்கு முற்றிலும் மாறாக விஜய் தற்போது நடித்து வரும் தெறி படத்தில் அவருடைய போலீஸ் கேரக்டர் படு சீரியஸாக அமைக்கப்பட்டுள்ளது.
தெறி படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே போலீஸ் வேடத்தில்தான் விஜய் அறிமுகமாவாராம்.
தெறி படத்தில் விஜய்யின் கேரக்டர் பற்றி சொல்லும்போது கூடுதல் தகவல் ஒன்றையும் சொல்கிறார்கள் அப்படத்தில் பணியாற்றுபவர்கள்.
என்னை அறிந்தால் படத்தில் அஜித் நடித்த சத்யதேவ் போலீஸ் அதிகாரியைப் போலவே தெறி விஜய்யின் கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதாம்.
அதுமட்டுமல்ல, விஜய்யின் கெட்டப்பிலும் சத்யதேவின் சாயல் இருக்கிறதாம்.