மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபுதேவா நடிப்பில் 2001ல் வெளியான படம் மனதை திருடி விட்டார். நாராயண மூர்த்தி இயக்கிய இந்த படத்தில் கெளசல்யா, காயத்ரி ஜெயராமன், விவேக், வடிவேலு உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் வடிவேலு-விவேக்கின் காமெடி ஹைலைட்டாக அமைந்தது. அதோடு, வடிவேலு பல கெட்டப்புகளில் நடித்திருந்தார். அதில் ஒரு கெட்டப்பில் மறைந்த மைக்கேல் ஜாக்சன் ரோலில் நடித்து அசத்தினார். ஆங்கில பாடலை பாடியபடி ஒவ்வொரு சீனிலும் என்ட்ரியான வடிவேலு, பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருந்தார்.
இந்த நிலையில், சமீபகாலமாக வடிவேலு பேசி நடித்து பிரபலமான டயலாக்குகள் பல படங்களில் டைட்டீல்களாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது மனதை திருடி விட்டாய் படத்தில் மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் அவர் நடித்தது போன்று நான் கடவுள் ராஜேந்திரன் ஒரு படத்தில் நடிக்கிறாராம். அதனால் வடிவேலுவைப் போலவே மைக்கேல் ஜாக்சனாக தன்னை முழுசாக மாற்றிக்கொள்ளும் அவர், வடிவேலுவின் நடிப்பு சாயல் இல்லாத வகையில் ஒரு புதிய கோணத்தில் அந்த கெட்டப்பில் நடிக்கிறாராம்.