தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரண்டன் ஃபேசர் மற்றும் ரேச்சல் வெய்ஸ் நடிப்பில் 1999ல் வெளியான மம்மி படம் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமாக உலகையே ஆட்டிப் படைத்தது. எகிப்து தேசத்தின் சவங்களை பதப்படுத்தி வைக்கும் இடத்தை ஆராய்ச்சி செய்யப்போகும் குழுவால் உயிர்த்தெழும் மம்மியின் அட்டகாசமும் அதை எதிர்த்து போராடும் நாயகனின் வீரமுமே கதையின் அம்சமாகும்.
பிரண்டன் ஃபேசர் நடிப்பிலே அந்த படம் மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. மூன்று படங்களையும் இயக்கியவர் ஸ்டீபன் சோமர்ஸ் ஆவார். தற்போது, மம்மியின் மீள் உருவாக்கம் படத்தை எடுக்கும் பணியை தொடங்கி உள்ளார் அலெக்ஸ் குர்ட்ஸ்மேன். இந்த படத்தில், பிரண்டன் ஃபேசருக்கு பதில் டாம் க்ரூஸை ஹீரோவாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர். அதேபோல், அலெக்ஸ் குர்ட்ஸ்மேன் இயக்கத்தில் 2012ல் வெளியான “பீப்பல் லைக் அஸ்” படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இசைப்புயலின் இசைக்கு தான் அடிமை என்று அலெக்ஸ் ஏற்கனவே குறிப்பிட்ட்டு இருந்தார். மம்மி ரீபூட்டில், ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கக் கூடும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.