‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் முத்திரை படமாக விளங்கும் மென் இன் ப்ளாக் திரைப்படத்திற்கு உலக ரசிகர்கள் ஏராளம். இதுவரை இத்திரைப்படத்தின் 3 பாகங்கள் வெளியாகியுள்ளன. நமது உலகில் நம்முடனே ஏலியன்ஸ் வாழ்வதாகவும், அதில் கெட்ட ஏலியங்களை அழிக்க ரகசிய குழுவான மென் இன் ப்ளாக் டீம் செயல்படுவதாகும் இத்திரைப்படத்தின் கதை அமைந்திருக்கும்.
படத்தின் தயாரிப்பாளரான லோரி மெக் டொனால்ட் அண்மையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியின் போது, மென் இன் ப்ளாக் படத்தின் 4ம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், ஆண் ஏஜண்டுகளின் சாகசத்தோடு இணைந்து பெண் ஏஜண்ட்டையும் இந்த பாகத்தில் இணைத்து கதை உருவாகி வருவதாகவும், விரைவில் நாயகிக்கான ஆடிசன்கள் நடத்தப் போவதாகவும் அவர் கூறினார்.
மென் இன் ப்ளாக், உமன் இன் ப்ளாக்காக மாறுமோ!