'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
எவர்கிரீன் பேரழகி ஸ்ரீதேவி, காந்தக் கண்ணழகி கஜோல், பாலிவுட் ராணி கரீனா கபூர், கரிஷ்மா கபூர், லேட்டஸ்ட்டான க்யூட் அழகி ஆலியா பாட் இந்த 5 பேரும், பிரபல மாத இதழான வோக்யூவின் டிசம்பர் மாத அட்டைப் படத்திற்காக அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளனர்.
மிக அழகான ஒரே மாதிரியான கலர் ஆடையில் ஐவரும் கண்ணைப் பறிக்கின்றனர். சமீபத்தில் இதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் படங்கள் வெளியாகின. இவர்களுக்கான உடைகளை வடிவமைத்தவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணிஷ் மல்ஹோத்ரா.
அவர் இதுபற்றி கூறுகையில், “சிறு வயதில் இருந்தே எனக்கு பாலிவுட் ஹீரோயிங்களைப் பிடிக்கும். அவர்களின் நடிப்பு திறன், அழகு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. நான் எப்போதுமே ஹிந்தி பட ரசிகன். அதனால், தான் இப்படி ஒரு ஹீரோயின் கூட்டணியில் ஒரு புது டிசைனை உருவாக்க திட்டமிட்டேன். நிச்சயம் இது அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
ஃபேஷனை அடிப்படையாக கொண்டு வெளியாகும் இந்த மாத இதழ் பாலிவுட்டில் பல ரசிகர்களால் விரும்பி படிக்கப்படுகின்றது. பல முன்னணி நடிகையரும் இதன் அட்டைப் படத்தில் பங்குபெற பெரிதும் ஆர்வம் காட்டுக்கின்றனர். எப்படியோ, ரசிகர்கள் கண்ணுக்கு விருந்து கிடைத்தால் போதும்.