'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரம்மோற்சவம் எனும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் மகேஷ் பாபு தனது தங்கை கணவரான சுதீர் பாபு நாயகனாக நடிக்கும் பலே மஞ்சி ரோஜு எனும் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு வந்த நடிகர் ராணா சுதீர் பாபுவிற்கு வாழ்த்து தெரிவித்து விட்டு மகேஷ் பாபுவிடம் சென்று அவரது காலில் விழ முற்பட்டார். ஆனால் இதனை மகேஷ் பாபு தடுத்து விட்டார். மகேஷ் பாபுவிடம் இணைந்து நடிக்க மாட்டேன் என ராணா இதற்கு முன்பு கூறியதால் கடுப்பில் இருந்த மகேஷ் பாபு ரசிகர்களுக்கு ராணாவின் இந்த நடவடிக்கை சமாதனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை மகேஷ் பாபு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர தவறவில்லை.