பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பண்டக சேஸ்கோ, சிவம் உள்ளிட்ட படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் ராம் நடிப்பில் 2011ல் வெளிவந்த கண்டிரீக படத்திற்கு பின்னர் எந்த படமும் வெற்றி பெறவில்லை ராம் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பண்டக சேஸ்கோ திரைப்படம் கூட சுமார் ரகம் தான். தற்போது ராம் கிர்த்தி சுரேஷுடன் இணைந்து நேனு சைலஜா படத்தில் நடித்து வருகின்றார். தயாரிப்பாளர் ரவி கிஷோர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குனர் கிஷோர் திருமலா இயக்குகின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பின்னர் ராம் இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது கண்டிரீக பட இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் கூறிய கதையில் நடிக்க ராம் சம்மதம் தெரிவித்து விட்டதால் அடுத்தகட்ட வேலைகளில் இயக்குனர் இறங்கி விட்டாராம்.