பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
குடும்ப நடிகையாக சினிமாவில் என்ட்ரியான நயன்தாரா, பில்லா படத்தில் பிகினி உடை தரித்து கவர்ச்சி நாயகியாகவும் உருவெடுத்தார். அதன்பிறகுதான் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அதோடு, தெலுங்கில் சில படங்களில் கிளாமர் ரோலில் நடித்திருந்தபோதும், பாலகிருஷ்ணா நடித்த ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்தார் நயன்தாரா. பாலகிருஷ்ணா ராமன் வேடத்தில் நடித்திருந்தார். அந்த படம் நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் நந்தி விருதினை பெற்றுக்கொடுத்தது.
ஆனால், பின்னர் காதல், காமெடி, ஆக்சன் என மாறுபட்ட கதைகளில் நடித்தபோதும், பக்தி கதைகளில் நயன்தாரா நடிக்கவில்லை. அதோடு முழுநேரத்தையும் தமிழ் மற்றும் மலையாள படங்களுக்காகவே செலவிட்டு வருகிறார். இந்த நிலையில், மீண்டும் அவரை தெலுங்கு படங்களில் நடிக்க சில இயக்குனர்கள அழைப்பு விடுத்து வந்த நிலையில், தற்போது வெங்கடேஷ் நடிக்கும் ஒரு படத்தின் கதையை ஓகே செய்திருக்கிறார் நயன்தாரா. பக்தி கதையில் உருவாகும் அந்த படத்திற்கு ராதா கிருஷ்ணா என்று டைட்டீல் வைக்கப்பட்டுள்ளதாம். ஆக, இந்த படத்தில் நயன்தாரா ராதா வேடத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. அதோடு, நயன்தாராவின் தமிழ் சினிமா மார்க்கெட் பிரகாசமாக இருப்பதால் அந்த படத்தில் சில தமிழ் நடிகர்களையும் நடிக்க வைத்து இரண்டு மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறார்கள்.