பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அருந்ததி படம்தான் அனுஷ்காவின் திறமைக்கு சரியான தீனி போட்ட படம். அதற்கு முன்புவரை அவரையும் சராசரி கதாநாயகிகளைப் போன்று மரத்தைச்சுற்றியே டூயட் பாட வைத்து வந்த டைரக்டர்கள் பின்னர், அனுஷ்கா கதாநாயகி என்றாலே அவருக்கு அழுத்தமான காட்சிகளையும் இணைக்கத் தொடங்கினர். இந்நிலையில், பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திர படங்கள் அனுஷ்காவை அண்ணாந்து பார்க்க வைத்து விட்டன. அதோடு இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை பன்மடங்கு அதிகப்படுத்தி குண்டு பெண்ணாகவும் நடித்தார். எந்த நடிகைகளும் இந்த மாதிரி உடல் எடையை அதிகப்படுத்தும் ரிஸ்க் எடுப்பதில்லை என்பதால் ஏனைய நடிகர் நடிகைகள் அனுஷ்காவை ஆச்சர்யமாக பார்த்தனர்.
இந்த நிலையில், அடுத்த மாதம் பாகுபலி-2 படப்பிடிப்பு தொடங்குவதால், கடந்த சில மாதங்களாகவே உடல் எடையை குறைக்கும் கடின முயற்சிகளில் இறங்கியிருந்தார் அனுஷ்கா. இந்த சமயத்தில அவர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து வந்திருப்பதாககூட செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அனுஷ்கா மறுத்தார். அதோடு, மூன்றே மாதங்களுக்குள் உடல் எடையை பழைய நிலைக்கு கொண்டு வந்தே தீருவேன் என்று சொல்லி அதை இப்போது அதை நிகழ்த்தியும் காட்டி விட்டாராம் அனுஷ்கா. சமீபத்தில் பாகுபலியில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரையும் படம் சம்பந்தமாக பேச ராஜமவுலி ஐதராபாத்திற்கு அழைத்திருந்தபோது அங்கு சென்ற அனுஷ்கா சொன்னபடியே உடல் எடையை குறைத்து விட்டிருந்ததைப்பார்த்து அனைவருமே ஆச்சர்யப்பட்டார்களாம். அதோடு, ராஜமவுலி அவரை வெகுவாக பாராட்டினாராம்.