பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் இப்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனபோதும், அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய்-அஜித் ஆகிய இருவரில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் என்கிற சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாகவே நிலவி வருகிறது. இதுகுறித்து சில பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் ரசிகர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி, ஒருவர் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றும், இன்னொருவர் அஜித் என்றும் அவ்வப்போது ஏதாவது ஒரு பரபரப்பு செய்தியை கொளுத்திப்போட்டு வருகின்றனர். அதோடு, மேற்படி இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் இணையதளங்களில் தங்களது அபிமான ஹீரோக்களே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு மோதிக்கொண்டு வருவதும் தொடர்கதையாகியிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது விஜய்யுடன் 'தெறி' படத்தில் நடித்து வரும் லண்டன் நடிகை எமிஜாக்சன், தனது டுவிட்டர் பக்கத்தில் 'தெறி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை போட்டு அதோடு விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டுள்ளர்.