பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். இவரது நடிப்பில் விஜயதசமியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 16ல் திரைக்கு வந்த திரைப்படம் ப்ரூஸ் லீ. ராம் சரண் மற்றும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் வெளிவந்த ப்ரூஸ் லீ திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கியிருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ஆறுதல் வெற்றியைக் கூட பெறவில்லை. தமிழில் ப்ரூஸ் லீ 2 என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வந்த இப்படம் தற்போது மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. தெலுங்கைப் போல் மலையாளத் திரை உலகிலும் ராம் சரணுக்கு ரசிகர்கள் உள்ளதால், பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் ப்ரூஸ் லீ படத்தின் மலையாள உரிமையை வாங்கியிருந்தது. கேரளாவில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளதாம்.