வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கடந்தவருடம் மலையாளத்தில் சூப்பர்ஹிட்டடித்த சாதாரண பட்ஜெட் படம் தான் 'இதிகாசா'. இரண்டு மோதிரங்களினால் ஆண் பெண்ணாவதும், பெண் ஆணாவதும் அதன்பின் நடக்கும் கலாட்டாக்களுமாக சுவாரஸ்யமாக கதை சொல்லியிருந்தார்கள். இந்தப்படத்தின் வெற்றியை கொண்டாடி முடிப்பதற்குள் அதில் ஹீரோவாக நடித்த டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இருந்தாலும் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டியதுபோல டாம் சாக்கோ 'இதிகாசா' படத்தில் நடித்த காரணத்தால் கொஞ்ச காலம் அந்த படக்குழுவினரும் போலீசாரின் சந்தேக வட்டத்தில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டனர்.
தற்போது அதிலிருந்து ஒரு வழியாக மீண்டுவிட்ட அந்தப்படத்தின் இயக்குனர் பினு தனது அடுத்த படமான 'ஸ்டைல்' படத்தையும் இயக்கி முடித்துவிட்டார். இதில் இயக்குனரின் பெருந்தன்மை என்னவென்றால் போதை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்த டாம் சாக்கோவையே மீண்டும் இந்தப்படத்தில் கதாநாயகனாக்கி இருப்பதுதான். ஒரு கார் மெக்கானிக், அவனை விட பத்து வயதுக்குமேல் குறைந்த வயது கொண்ட அவனது தம்பி, மெக்கானிக்கின் காதலி ஆகியோரை சுற்றி இந்த கதை பின்னப்பட்டுள்ளதாம். பழமையான கார்களாக சேகரிக்கும் நபர் ஒருவர் இவர்களது வாழ்க்கையில் குறுக்கிட, அதன்பின் நடப்பதை ஆக்சன், காமெடி என சரிசமமாக கலந்து படமாக்கியுள்ளாராம் இயக்குனர் பினு.