'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தி.மு.கழக தலைவர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் மற்றுமொரு நடிகர் ரக்ஷன் (துர்கா ஸ்டாலின் அண்ணன் மகன்) அறிமுகமாகும் படம் திருட்டு ரயில். கேத்தி என்ற புதுமுகம் ஹீரோயின். விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜெயப்பிரகாஷ் இசை அமைத்துள்ளார். திருப்பதி இயக்கி உள்ளார்.
திருட்டு ரயிலில் நடப்பது என்ன என்பத பற்றி இயக்குனர் திருப்பதி கூறியதாவது: தூத்துக்குடியைச் சேர்ந்த ஹீரோ ரக்ஷனும், அவரது நண்பர் சரண் செல்லமும் ஒரு சின்ன பிரச்சினையிலிருந்து தப்பிக்க திருட்டு ரயில் ஏறி சென்னை வருகிறார்கள். ஆனால் ரயிலில் அவர்கள் பெரும் பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்து மீண்டு வருகிறார்கள் என்பதான் கதை. நாயகி கீத்தியை ரயிலில் சந்தித்து காதல் கொள்ளும் ரக்ஷனுக்கு அதனால் ஏற்படும் பிரச்சினை தனிக் கதை. இது என் நண்பன் ஒருவன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. சினிமாவுக்காக காதல் போர்ஷனை கற்பனையாக இணைத்து படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. வருகிற 4ந் தேதி படம் வெளிவருகிறது.