பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் படம் என்றாலே ஒரு கும்பல் அந்தப் படத்தையும், விஜய்யையும் எந்த அளவிற்கு 'டிரோல்' செய்ய வேண்டுமோ அந்த அளவிற்கு 'வச்சி' செய்து விடுகிறார்கள். 'புலி' படம் வந்த போது இணையங்களில் படமும் சரி, விஜய்யும் சரி கிண்டல் பிடித்த ஆசாமிகளிடம் சிக்கி சின்னாபின்னமானார்கள். உண்மையிலேயே 'புலி' படம் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்த ஒரு படம். அஜித்தை விட விஜய்க்குத்தான் குட்டி குட்டி ரசிகர்கள் அதிகம். அவர்களைக் கேட்டால் கூட 'புலி' படம் 'சோட்டா பீம்' போல இருந்தது என்று உண்மையைப் போட்டு உடைத்தாலும் தங்களுக்குப் பிடித்த படம் என்றார்கள். ஆனால், மற்ற ரசிகர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், அந்தப் படத்தை குழந்தைகளுக்கான படமும் கூட என்று சரியாக மார்க்கெட்டிங் செய்யாமல் தோற்றுப் போனார்கள்.
இப்போது, 'தெறி' படத்திற்கும் கிண்டல் ஆசாமிகள் தங்களை வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். முதல் பார்வை வெளியிட்ட ஒரு சில மணி நேரத்தில் 'வச்சி' செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். விதவிதமான 'தெறி' படத்தின் மீமீக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் நேற்று வெளியான இரண்டு மீமீக்கள் பற்றிப் பேசாதவர்களே இல்லை எனலாம். ஒரு மீமீயில் வடிவேலுவும் மற்றொன்றில் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் பல படைப்பாளிகளும், பல நகைச்சுவைவாதிகளும் பரந்து இருக்கத்தான் செய்கிறார்கள்.
'தெறி' முதல் பார்வைக்கே இப்படி என்றால் இன்னும் 'தெறி' டீசர், டிரைலர், பாடல்கள், படம் அடுத்தடுத்து வரப் போகிறதே...எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் விஜய் ரசிகர்களே...!