ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்ரீமந்துடு படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டிற்கு பின்னர் மகேஷ் பாபு, ''பிரம்மோற்சவம்'' எனும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என மூன்று நாயகிகளுடன் ''பிரம்மோற்சவம்'' படத்தில் டூயட் பாடும் மகேஷ் பாபு அடுத்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில், ஐந்து முறை இந்திய தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து துப்பாக்கி படத்தில் பணியாற்றியுள்ளார். தற்போது மீண்டும் இருவம் இணைந்து பணியாற்றவுள்ளனர். பிரம்மோற்சவம் படத்தை முடித்த பின்னர் மகேஷ் பாபு இப்படத்தில் நடிக்கவுள்ளார். 2016 மார்ச் மாதத்தில் இப்படத்தின் பணிகளை துவங்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம்.