தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. அதன்பிறகு யாகவாராயினும் நாகாக்க படத்திலும் நடித்தவர், இப்போது கோ-2, கவலை வேண்டாம் படங்களைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். டார்லிங் படத்தில் மிரட்டல் பேயாக நடித்த நிக்கி, இந்த படத்திலும் ஒரு அதிரடியான வேடத்தில்தான் நடிக்கிறாராம்.
பெரும்பாலும் நடிகைகளைப்பொறுத்தவரை முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். இந்த விசயத்தில் நிக்கி வித்தியாசமானவராக இருக்கிறார். அதாவது, படத்தில் நான் கொஞ்சம் நேரமே வந்தாலும் எனது கேரக்டர் பேசப்படக்கூடியதாக இருக்க வேண்டும். படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் நானும் இடம்பிடிக்க வேண்டும் என்கிறாராம். அதனால், இரண்டு பாட்டுக்கு வந்து டூயட் பாடினோம் என்பதில்லாமல், ஏதாவது பர்பாமென்ஸ் பண்ண வாய்ப்பு கொடுங்கள் என்று டைரக்டர்களிடம் ஓப்பனாக கேட்கிறாராம்.
அந்த வகையில், லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நிக்கி கல்ராணிக்கு வழக்கமான கதாநாயகி வேடமில்லையாம். முதலில் சாதாரணமாக வரும் அவரது கேரக்டர் பின்னர் பவர்புல்லாக மாறி விடுமாம். நிக்கியின் கேரக்டர் வெளியில் லீக்அவுட்டாகி விடக்கூடாது என்பதற்காக, ரொம்ப சஸ்பென்சாக படமாக்கிக்கொண்டிருக்கிறார்களாம். மேலும், கடந்த சில வாரங்களாக மகாபலிபுரத்தில் நடந்து வந்த மொட்ட சிவா கெட்ட சிவா படப்பிடிப்பு நேற்றில் இருந்து சென்னையை அடுத்துள்ள விஜிபி அருகில் நடந்து வருகிறது.