மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
துணை நடிகராக பல படங்களில் நடித்து வந்த விஜய்சேதுபதியை கதாநாயகனாக தென்மேற்கு பருவகாற்று படத்தில் அறிமுகப்படுத்தினார் சீனுராமசாமி. அதன் பிறகு நீர்ப்பறவை படத்தை இயக்கியநிலையில் அடுத்தப்பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார் சீனுராமசாமி. அதைக் கேள்விப்பட்ட விஜய்சேதுபதி, மிக குறைவான சம்பளத்துக்கு நடிக்க ஒப்புக்கொண்டு சீனுராமசாமிக்கு கால்ஷீட் கொடுத்து 'இடம் பொருள் ஏவல்' படத்தில் நடித்துக்கொடுத்தார். 'இடம் பொருள் ஏவல்' படத்தில் கவிஞர் வைரமுத்து, யுவன் சங்கர் ராஜா இருவரையும் இணைத்து வைத்தார் சீனுராமசாமி.
யார் கண்பட்டதோ... அப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி கடனாளியானதால் இடம் பொருள் ஏவல் படம் முடங்கிப்போனது. அதன் காரணமாக சீனுராமசாமி பொருளாதார ரீதியில் சிரமப்பட, அதற்காகவே இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி.
சீனுராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்' படத்தில் இணைந்த அதே கூட்டணி இந்தப்படத்திலும் இணையவிருக்கிறது. அதாவது சீனுராமசாமி, விஜய்சேதுபதி, கவிஞர் வைரமுத்து, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மீண்டும் இப்படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ரஜினி பட டைட்டிலான 'தர்மதுரை' என்று பெயர் வைத்துள்ளார்கள். இப்படத்தை 'ஸ்டுடியோ 9' நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷும், கார்த்திக்கும் இணைந்து தயாரிக்கிறார்கள். 'இடம் பொருள் ஏவல்' படம் இன்னும் ரிலீசாகவில்லை என்ற கவலையை மறந்துவிட்டு தர்மதுரை பட பணியில் மூழ்கிவிட்டார் சீனுராமசாமி.