நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
கோபிசந்த ரெஜினாவுடன் இணைந்து சௌக்கியம் என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகின்றார். கோபிசந்தின் யக்னம் படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் சௌத்ரி பத்து வருடங்கள் கழித்து கோபிசந்தின் சௌக்கியம் படத்தை இயக்குகின்றார். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படத்தில் இடம் பெறவுள்ள குத்தாட்ட பாடலுக்கு கோபிசந்துடன் இணைந்து நடனமாட ஸ்வேதா பரத்வாஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். மகேஷ் பாபுவுடன் பிஸ்னஸ்மேன் படத்தில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்த ஸ்வேதா பரத்வாஜ் கோபிசந்துடன் குத்தாட்டம் போட தயாராகி வருகின்றார். இவ்வார இறுதியில் இப்பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறும் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தன்று திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.