தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நிகில் அத்வானி இயக்கும் பஜார் படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. ஆனால் இப்போது ஹிருத்திக் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக அக்ஷ்ய் குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஜார் படத்தின் கதையை ஹிருத்திக் கேட்டுள்ளார். ஆனால் அவர் நடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஏற்கனவே தான் கமிட்டாகியுள்ள படங்களில் அவர் பிஸியாக இருப்பதால் அவரால் இந்தப்படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நிகில், அக்ஷ்ய் குமாரிடம் பஜார் கதையை கூறியிருக்கிறார், அவருக்கு இந்த கதை பிடித்திருப்பதாகவும், விரைவில் அவர் நடிப்பார் என்றும் தெரிகிறது. அக்ஷ்ய் குமார் தற்போது ஏர்லிப்ட் படத்தை முடித்துவிட்டார். அடுத்தப்படியாக ஹவுஸ்புல்-3யில் நடித்து வருகிறார். இதை முடித்த பின்னர் பஜாரில் நடிப்பார் என தெரிகிறது.