ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள படம் இஞ்சிஇடுப்பழகி. இதே படம் தெலுங்கில் ஜீரோ சைஸ் என்ற பெயரில் தயாராகி உள்ளது. பிவிபி சினிமா தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 27ந் தேதி தமிழ்நாடு, ஆந்திரா உள்பட உலக நாடுகள் முழுவதும் வெளிவருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஆபாசமாக சில காட்சிகள் இருப்பதாக கூறி யுஏ சான்றிதழ் தர முன்வந்தனர். யுஏ பெற்றால் வரிவிலக்கு பெற முடியாது என்று தயாரிப்பு தரப்பு வாதம் செய்ததால். படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆர்யா, அனுஷ்கா லிப்லாக் முத்தக் காட்சியின் நீளத்தை குறைத்து அதை இலைமறை காயாக காட்டினால் யு தருவதாக தணிக்கை குழுவினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த காட்சி குறைக்கப்பட்டது.
தெலுங்கில் வரிவிலக்கு பிரச்னை இல்லை என்பதால் எந்த சான்றிதழ் என்றாலும் ஓகே தான். எனவே தெலுங்கு பதிப்புக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே தெலுங்கு ரசிகர்கள் ஆர்யா, அனுஷ்கா லிப்லாக் முத்தக்காட்சியை ரசிக்கலாம். தமிழ் ரசிகர்களுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் காத்திருங்கள் டியூப்பில் வந்து விடும்.