தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்ற ஹாட் பர்ஸ்யூட் பட நாயகி மற்றும் பிரபல டிவி தொகுப்பாளினி சோபியா வெர்கராவின் திருமணம் கடந்த நவம்பர் 22ம் தேதி ஜோவுடன் நடைபெற்றது. திருமண விழாவில் அவர் அணிந்திருந்த ஆடை அனைவரின் கண்களையும் பறித்தது.
ஏனென்றால், 32 தேர்ந்த தையல் வல்லுனர்கள், 1657 மணி நேரங்கள் மெனக்கெட்டு அந்த ஆடையை வடிவமைத்துள்ளனர். ஜுகைர் முராத் என்ற ஆடை வடிவமைப்பாளர் தலைமையில் பிரத்யேகமான திருமண ஆடையை வடிவமைக்க கூறியுள்ளார். அதன் பேரில், மிகவும் கவர்ச்சிகரமான அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் அந்த ஆடையை வடிவமைத்துள்ளார் ஜுகைர்.
சோபியா, ஜோ திருமணம் அவர்களின் 400 நண்பர்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் முன்னிலையில் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்றது.