ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கலகலப்பு, பீட்சா, சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா என வரிசையாக ஹிட் படங்களில் காமெடியனாக நடித்ததால் ராசியான காமெடி நடிகராகி விட்டார் கருணாகரன். அதோடு பத்ரி இயக்கிய ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அஞ்சாதே விஜயலட்சுமி கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், தற்போது ராதாமோகன் இயக்கியுள்ள உப்புக்கருவாடு படத்திலும் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் கருணாகரன். கதைப்படி இந்த படத்தில் அவர்தான் நாயகன். ஒரு புதுமுக இயக்குனர் ஒரு படத்தை எடுத்து முடிக்க என்னென்ன அவஸ்தைகள் படுகிறார். அதன்காரணமாக மீனாக இருந்த அவர் எப்படி கருவாடாக மாறிப்போகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில், கருணாகரன் இயக்கும் படத்தில் நடிக்க வரும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நந்திதா. இதுவரை குடும்பப்பாங்காக மட்டுமே நடித்து வந்த அவர் முதன்முதலாக கிளாமர் உடையணிந்து நடித்துள்ளார். மற்றபடி கருணாகரனுக்கும், நந்திதாவுக்கும் டூயட் எதுவும் கிடையாது. இதுபற்றி கருணாகரன் கூறுகையில், இதற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்திலும் நடித்துள்ள இயக்குனர் வேடம் எனக்கு மனதளவில் திருப்தி கொடுத்துள்ளது. அதாவது, நான் முதன்முதலாக காமெடியனாக நடித்த சுந்தர்.சியின் கலகலப்பு படத்தில் எந்த அளவுக்கு என் கேரக்டரை என்சாய் பண்ணி நடித்தேனோ அதேமாதிரி இந்த உப்புக்கருவாடு படத்திலும் என்சாய் பண்ணி நடித்தேன். குறிப்பாக இந்த காமெடி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்கிறார் கருணாகரன்.