ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மதுவுக்கு எதிரான பரப்புரைகள் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தீவிரம் அடைந்துள்ளன. ஆனாலும் இயக்குநர் ராஜேஷின் தனது ஒவ்வொரு படத்தின் கதையிலும் அல்லது குறைந்தபட்சம் தலைப்பிலாவது மதுவின் நெடி நிச்சயம் இருக்கும். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களில் சரக்கடிக்கும் காட்சிகள், வசனங்கள் அதிகமாக இருந்தன. கடைசியாக இயக்கிய வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் தலைப்பின் சுருக்கத்தில் பிரபலமான மதுவின் பிராண்ட் நேம் (VSOP) இருந்தது. படத்திற்கு டைட்டில் வைக்கும்போதே அதன் 'ஷார்ட் ஃபார்மை'யும் ரசிகர்களை கவரும் வகையில் சூட்டுவார் ராஜேஷ். தனது அடுத்த படத்திற்கும் வித்தியாசமான பெயர் ஒன்றை வைத்து விட்டார் ராஜேஷ், . செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை' படத்தில் 'கடவுள் இருக்கிறான் குமாரு' என்ற பிரபல வசனம் உண்டு. அதையே தனது படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'கடவுள் இருக்கிறான் குமாரு' என்று பெயர் வைத்தாலும் சுருக்கமாக 'KIK' என்றே குறிப்பிடுகின்றனர் ராஜேஷ் யூனிட்டை சேர்ந்தவர்கள். சரக்கு வாசனை அடிக்கும் டைட்டிலை வைக்க ரூம் போட்டு யோசிப்பாரு போலிருக்கிறது.