விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
தலைப்பைப் பார்த்ததும் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் எங்கள் 'தல, தளபதி' படமாகத்தான் இருக்கும் என்று நினைத்து விடுவார்கள். ஏனென்றால், அவர்கள்தான் செவ்வாய் கிரகத்து வசூலையும் சேர்த்து கணக்கிட்டுச் சொல்வார்கள். ஓடாத படத்திற்கும் 100 கோடி வசூல் என்பார்கள், ஓடிய படத்திற்கும் 100 கோடி வசூல்தான் என்பார்கள். நல்ல வேளை, விஜய்யும், அஜித்தும் ஹிந்திப் படங்களில் நடிக்கவில்லை. இல்லையென்றால் 1000 கோடி வசூல் என்று அள்ளிவிட்டிருப்பார்கள்.
ஆனால், ஒரே ஆண்டில் இரண்டு படங்களின் மூலமே 500 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறார் சல்மான் கான். இவரைப் பற்றிப் பல சர்ச்சைகள் எழுந்தாலும் படங்களின் வசூல் மட்டும் பலருக்கும் லாபத்தைக் கொடுத்துவிடுகிறது. என்ன மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் தெளிவான முடிவில் இருக்கிறார் சல்மான். குடும்பத்துடன் ரசிகர்கள் படம் பார்க்க வேண்டும், ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் கூடாது, படங்களில் ஆபாசம் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். குறிப்பாக கேமராவைப் பார்த்து 'பன்ச்' வசனம் பேச மாட்டார்.
இந்த ஆண்டில் சல்மான் கான் நடித்து வெளியான 'பஜ்ரங்கி பைஜான்' படம் 300 கோடி வசூலை அள்ளியதாக ஒட்டுமொத்த மும்பை மீடியாக்களும் தெரிவிக்கின்றன. தீபாவளிக்கு வெளிவந்த 'பிரேம் ரத்தன் தான் பாயோ' இதுவரையில் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி இந்த 2015ம் ஆண்டில், ஒரே ஆண்டில் 500 கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய வசூல் சாதனையை புரிந்திருக்கிறார் சல்மான். ஆமீர்கான், ஷாரூக்கான் செய்யாத ஒரு சாதனை இது. ஹிந்தித் திரையுலகில் அதிக அளவில் 100 கோடி வசூல் சாதனையை வைத்துள்ள ஒரே நடிகர் சல்மான்கான் என்பது குறிப்பிடத்தக்கது. தான் நேசிக்கும் சினிமாவிற்கு சல்மான் நேர்மையாக இருக்கிறார் என்கிறது பாலிவுட் வட்டாரம்.