'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நிவின் பாலி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. நாக சைதன்யா நாயகனாக இப்படத்தில் நடிக்கின்றார். சித்தாரா எண்டர்டையின்மென்ட் பட நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சண்டூ மொண்டெடி பிரேமம் படத்தை தெலுங்கில் இயக்குகின்றார். இப்படத்திற்கு மஜ்னு என பெயரிட்டுள்ளனர். பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரவன் தெலுங்கிலும் அதே வேடத்தில் நடிக்கவுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கின்றார். மூன்றாவது நாயகிக்கான தேடல் நடைபெற்று வந்தது. நடிகை ஆயிஷா சர்மா மூன்றாவது நாயகியாக இப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. ஆயிஷா பிப்ரவரியில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.