ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எந்திரன் 2ம் பாகத்தின் பணிகளை படுவேகமாக ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் ஷங்கர். விரைவில் ரஜினியுடன் அமெரிக்கா சென்று அங்கு அர்னால்டை சந்திக்க இருக்கிறார். படப்பிடிப்புக்கான லொக்கேஷன்களை தேடி உலகம் முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கிறார். கிராபிக்ஸ் வேலைகளை செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி வருகிறது.
எந்திரன் படத்திற்கு மேக்அப் மேனாக பணியாற்றப் போகிறவர் நியூசிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற மேக்அப் கலைஞர் ஸீன் ஃபுட். இவரின் வீட்டா ஒர்க் ஷாப் நிறுவனம்தான் எந்திரன் 2வின் மேக்அப் பணிகளை கவனிக்கிறது. ஷங்கரின் ஐ படத்தின் மேக்அப் ஏரியாவை கவனித்துக் கொண்டதும் இவர்கள்தான்.
எந்திரன் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பல கெட்அப்கள் இருக்கிறது. முதல் பாகத்தில் இருந்த டாக்டர் வசீகரன், எந்திரன், சிட்டி கெட்அப்கள் அப்படியே தொடர்கிறது. புதிய கெட்அப்களுக்கான மேக் அப் டெஸ்ட் தற்போது சென்னையில் ஓசைப்படாமல் நடந்து வருகிறது. ரஜினியின் சாயல்கொண்ட 10க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து ஸீன் ஃபுட்டின் வழிகாட்டுதல்படி அவர்களுக்கு மேக்அப் போட்டு பார்க்கப்படுகிறது. இதற்காக அவரது உதவியார்கள் சிலர் சென்னை வந்திருப்பதாக கூறப்படுகிறது. எந்தெந்த கெட்அப் சரியாக பொருந்துகிறதோ அந்த கெட்அப் மட்டும் ரஜினி கபாலி முடித்து திரும்பியதும் அவருக்கு போட்டு பார்த்து இறுதி செய்யப்படுகிறது.
இந்த மேக்அப் டெஸ்ட்டில் கலந்து கொள்ளும் ரஜினி சாயல் கொண்டவர்களுக்கு கணிசமான சம்பளம் வழங்கப்படுவதோடு விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்ற எழுதியும் வாங்கி விடுகிறார்களாம்.