வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தீபாவளி தினமான நவம்பர் 10ம் தேதி 'வேதாளம்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. படத்திற்கான 'ஓபனிங் டாக்' வேகமாகப் பரவ மழையால் ஏற்பட்ட தொடர் விடுமுறையும் படத்தின் வசூலை அப்படியே தக்க வைத்துக் கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள். இன்றுடன் படம் வெளிவந்து இரண்டாவது வாரம் முடியப் போகிறது. பல இடங்களில் இந்தப் படத்தின் வசூல் 'எந்திரன்' படத்தின் வசூலைத் தொட்டுவிட்டதாக சிலர் பரப்பி வருகிறார்கள்.
இன்றைக்கு ரசிகர்கள் மட்டும் சமூக வலைத்தளங்களில் இல்லாமல், சில வினியோக நிறுவனங்களும், சில திரையரங்குகளும் கூட சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். அவர்கள படத்திற்கான வசூலைப் பற்றி சில புள்ளி விவரங்களை அறிவிக்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்து ரசிகர்களும் அவர்கள் கணக்கிற்கு ஒரு வசூலைக் கணக்கிட்டு அளந்து விடுகிறார்கள். ஒரு பக்கம் சீனியர் வினியோகஸ்தர்கள் படத்தைப் பற்றி ஒரு விவரத்தை அளிக்க, மறுபக்கம் அஜித்தின் ரசிகர்கள் வேறொரு வசூல் விவரத்தை அளிக்க 'வேதாளம்' படத்தின் வசூல் அடிக்கடி முருங்கை மரம் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது.
100 கோடி வசூலை படம் கடந்த வாரமே தாண்டி விட்டது என்ற தகவலும் வெளியானது. ஆனால், படத்தை வாங்கிய பெரிய இடத்து வினியோக நிறுவனம் பட வசூல் பற்றி அறிவித்தால் மட்டுமே படத்தின் உண்மை வசூல் என்ன என்று தெரிய வரும். அப்படி அவர்கள் அறிவித்தால் மட்டுமே படத்தின் உண்மை விவரம் தெரிய வரும். அதனால் படத்தின் வசூல் என்னவென்று தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஏன் நடித்த அஜித்திற்கே கூடத் தெரியாது என அனுபவ வினியோகஸ்தர் தெரிவிக்கிறார்.