பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிம்பு, பிரபுதேவாவைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, அவரையே விரைவில் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா பிஎம்டபிள்யூ கார் வாங்கிக் கொடுத்தார் என்று கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளது. முன்பெல்லாம் சென்னை வரும்போது நட்சத்திர ஹோட்டலில் தங்கி வந்தவர் இப்போது விக்னேஷ் சிவனின் பெசன்ட்நகரில் வீட்டில்தான் தங்குகிறார் என்கிறார்கள்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் கதையில் லேட்டஸ்ட் தகவல்...
விரைவில் விக்னேஷ் சிவனுக்கு கழுத்தை நீட்ட முடிவு செய்துவிட்டார் நயன்தாரா என்பதுதான். அடிப்படையில் கிருஸ்தவப்பெண்ணான நயன்தாரா, பிரபுதேவாவை காதலித்தபோது அவருக்காக இந்து மதத்துக்கு மாறினார். பிரபுதேவா உடனான காதல் முறிந்த பிறகு மீண்டும் தாய் மதத்துக்கே திரும்பிவிட்டார். போப்பை சந்தித்து ஆசி பெறுவதற்காக அண்மையில் ரோம் சென்றபோது விக்னேஷ் சிவனையும் அழைத்துச் சென்றார். நயன்தாரா உடன் ரோம் சென்ற விக்னேஷ் சிவன் அங்கேயே கிருஸ்தவ மதத்துக்கு மாறியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாராவின் விருப்பத்தின்படி கிருஸ்தவ மதத்துக்கு மாற விக்னேஷ் சிவன், சம்மதம் தெரிவித்ததும் விக்டர் என்ற பெயரையும் நயன்தாரா தேர்வு செய்திருக்கிறார். விக்னேஷ்சிவனை அவரது நண்பர்கள் விக்கி என்றே அழைத்து வருகின்றனர். விக்டர் என்று பெயரை மாற்றிக் கொண்டாலும் கூட அந்தப்பெயரின் சுருக்கமாகவும் விக்கி என்று அழைக்கலாம் என்பதற்காகவே விக்னேஷ் சிவனை விக்டர் ஆக்கி இருக்கிறார் நயன்தாரா.