'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்ரீமந்துடு படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, பிரம்மோற்சவம் எனும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் இப்படத்தின் கதை மாற்றக் கோரி படப்பிடிப்பை மகேஷ் பாபு நிறுத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. இத்தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் பிரம்மோற்சவம் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்று விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதரபாத்தில் வரும் நவம்பர் 28 ஆம் தேதி துவங்கவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் டிசம்பர் 8 ஆம் தேதி வரை ஐதராபத்தில் தொடரும் படப்பிடிப்பு மறுநாள் அதாவது டிசம்பர் 9 ஆம் தேதி ஊட்டியில் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் மகேஷ் பாபு இப்படத்தின் கதையில் மாற்றம் செய்ய இயக்குனரிடம் கேட்டதாக வெளியானவை வதந்திகளே என்றும் அவற்றில் உண்மை இல்லை என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் பிரம்மோற்சவம் படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக சமந்தா,காஜல் அகர்வால், பிரணிதா அகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.