கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ள படம் பாஜிராவ் மஸ்தானி. சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ரன்வீர், ப்ரியங்கா, தீபிகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில், 'தேவதாஸ்' படத்தில் இடம்பெற்றுள்ள ''டோலா ரே...'' பாடல் போன்று ''பிங்கா'' என்ற பாடலும் இடம்பெற்றுள்ளது. இதில் ப்ரியங்காவும், தீபிகாவும் அற்புதமாக நடனம் ஆடியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்பாடல் பற்றி தீபிகா, ப்ரியங்கா இருவரும் மனம் திறந்துள்ளார்கள். ப்ரியங்கா கூறுகையில், சஞ்சய் லீலா பன்சாலி என்ற ஒருவருக்காகத்தான் இப்பாடல் பிரபலமாகியுள்ளது. பிங்கா பாடல், ஒரே நபரை விரும்பும் இரண்டு பெண்கள் பாடும் பாடல் என்று கூறியுள்ளார்.
தீபிகா கூறுகையில், இரண்டு ஹீரோயின்கள் நடனம் ஆடுவதால் தான் இந்த ஒப்பீடு. ஆனால் இதில் ஒப்பிட்டு பேச ஒன்றும் இல்லை. இந்தப்படத்தில் நடனம் ஆடியது மிகழ்ச்சி. மிகவும் வித்தியாசமான, மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எங்களால் முடிந்தளவுக்கு நாங்கள் ஆடியுள்ளோம், அதற்கான ரிசல்ட்டும் நன்றாக வந்துள்ளது என்றார்.