பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் இணைந்துள்ள 'அச்சம் என்பது மடமையடா'. இப்படத்தின் முதல் டீசரை கடந்த ஆகஸ்ட் மாதம் கடைசியில் வெளியிட்டிருந்தனர். அந்த டீசரில் சிம்பு தன்னுடைய நான்கு நண்பர்களுடன் தன் மனம் கவர்ந்தவரைப் பற்றிப் பேசியது மட்டுமே இடம் பெற்றிருந்தது.
தெலுங்கில் 'சாஹசம் சுவாசகா சாகிப்போ' என்ற பெயரில் அதே மாதிரியான டீசர் அப்படத்தின் நாயகனான நாக சைதன்யா நடிக்க வெளியிடப்பட்டது. இன்று நாக சைதன்யாவின் பிறந்த நாள் என்பதால் படத்தின் இரண்டாவது டீசரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் கௌதம் மேனனின் பின்னணிக் குரலில் படத்தின் நாயகன் யார் என்பது பற்றியும், அவனுக்கு என்ன பிடிக்கும் என்பது பற்றியும், படம் என்ன மாதிரியான படம் என்பதைப் பற்றிப் புரிய வைக்கும் விதத்திலும் ஒரு ஆக்ஷன் டிரைலரை வெளியிட்டிருக்கிறார்கள்.
கௌதம் மேனன் தமிழில் இயக்கிய முந்தைய படமான 'என்னை அறிந்தால்' டிரைலரை விட இந்த டிரைலர் அதிரடியாக அமைந்துள்ளது. அந்தத் தெலுங்கு டீசர் விரைவில் தமிழிலும் வெளியாக வாய்ப்புள்ளது. 'அச்சம் என்பது மடமையடா' டீசரைப் போலவே இந்த இரண்டாவது டீசர் மீண்டும் ஒரு அதிர்வை ஏற்படுத்தப் போவது உறுதி.