பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கஞ்சே படத்தின் வெற்றிக்கு பின்னர் வருண் தேஜ் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லோபர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகை திஷா நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் டிசமபர் 18 ஆம் தேதி இப்படத்தை வெளியிட பூரி ஜெகன் நாத் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் நடிகை ரேவதி, நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரேவதி இப்படத்தில் உயிரோட்டமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கள் கூறுகின்றன. இப்படத்தில் நடிக்கையில் வருண் தேஜின் நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக ரேவதி கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் வாயிலாக வருண் தேஜ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பார் எனவும் ரேவதி வாழ்த்தியுள்ளார். இப்படத்தில் நடித்து வரும் ரேவதி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தெலுங்கில் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.