சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சிம்புடனான தொழில் போட்டியில் இருந்து விடுபட்ட பிறகு, தனது பாதையில் சென்று கொண்டிருந்த தனுஷ், 3 படத்தில் தன்னுடன் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயனை வைத்து பின்னர் எதிர்நீச்சல் என்ற படத்தை தயாரித்தார். அதோடு அந்த படத்தின் ப்ரமோஷன்களில் ஈடுபட்டபோது ரஜினி ரேஞ்சுக்கு சிவகார்த்திகேயனின் நடிப்பை பில்டப்கொடுத்தார் தனுஷ். அதையடுத்து மீண்டும் தனது பேனரில் காக்கி சட்டை படத்திலும் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். அந்த சமயத்தில், தனுஷ் எனக்கு சொந்த அண்ணன் மாதிரி என்றெல்லாம் மேடைகளில் பேசினார் சிவகார்த்திகேயன். தனுசும் அதற்கு தலையசைத்தார். ஆனால் பின்னர், தனுஷ் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்து விட்டார் என்று செய்திகள் வெளியானபோது மொதலுக்கே மோசம் வந்து விடும் போலிருக்கே என்று பின்னர் அவருடன் கூட்டணி வைப்பதை நிறுத்திக்கொண்டார் தனுஷ்.
அதேசமயம், சிவகார்த்திகேயனுக்கு இணையாக வளர்ந்து கொண்டிருந்த இன்னொரு நடிகரான விஜயசேதுபதியை தனது பேனரில் நானும் ரெளடிதான் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதனால் மீண்டும் விஜயசேதுபதியை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ். இந்த நேரத்தில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் படத்திற்கு தர்மதுரை என்ற டைட்டீலை வைக்க முடிவெடுத்தபோது, ரஜினியிடம் அதுபற்றி அனுமதி பெற வேண்டுமே என்றபோது தனுஷ்தான் விஜயசேதுபதியின் நினைவுக்கு வந்திருக்கிறார். அவர் மூலமாக ரஜினியிடம் பேசி அனுமதி வாங்கலாம் என்று அவரை அணுகியிருக்கிறார். அப்போது எந்தவித மாற்றுக்கருத்தும் சொல்லாமல் உடனே ரஜினியை சந்தித்து பேசி தர்மதுரையை விஜயசேதுபதிக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறார் தனுஷ். இதனால் அவர்களுக்கிடையிலான நட்பு இப்போது இன்னும் உறுதியாகியிருக்கிறதாம்.