தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டிசம்பர் மாதம் வெளியிடத் தயாராக கெத்து, டார்லிங்-2, பசங்க -2, ரஜினி முருகன், சவுகார்பேட்டை, கரையோரம் உட்பட ஏறக்குறைய ஒரு டஜன் படங்கள் காத்திருக்கின்றன. இந்த போட்டியில் சிக்கிக் கொள்ளாமல் அதர்வா நடிக்கும் ஈட்டி படத்தை நவம்பர் மாதம் 27 அன்று ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருந்தார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். பிரபல விநியோகஸ்தரான காஸ்மோ வில்லேஜ் சிவா மூலம் தமிழகம் முழுக்க சுமார் 350 தியேட்டர்களில் ஈட்டி படத்தை வெளியிட இருந்தார்.
சென்னையில் பெய்த தொடர்மழை காரணமாக திட்டமிட்டபடி ஈட்டி படத்தை சென்சாருக்கு அனுப்பமுடியவில்லையாம். எனவே ஈட்டி படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார். அதே தினத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த பசங்க-2 படமும் வெளியாகிறது. இன்னொரு பக்கம் லிங்குசாமி தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படமும் வெளியாக இருப்பதாக தகவல் அடிபடுகிறது.
பசங்க-2, ரஜினி முருகன் என எத்தனை படங்கள் வந்தாலும் ஈட்டி படத்தை டிசம்பர் 4 ஆம் தேதி ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். ஈட்டி படத்தை ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு படத்தில் அருமையான பல விஷயங்கள் உள்ளன. எனவே ஈட்டி படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் உள்ளார் மைக்கேல் ராயப்பன். மொத்தத்தில் சூர்யா உடன் அதர்வாவை மோதவிட்டுவிட்டார்.